வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகள் எதுவும் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என்று கூறி இலங்கையின் அனைத்து அரச பாடசாலைகளிலும் பணியாற்றும் ஆசிரிய உதவியாளர்கள் நாளைமறுதினம் (05) எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குவதாக சலுகைகள் இதுவரை கிடைக்காததை சுட்டிக்காட்டி ஆசிரியர் தினமான 5ஆம் திகதி இவ்வெதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்