தொழிலாளருக்கு ஆதரவாக நாளை களமிறங்கும் த.மு.கூட்டணி

இன்றுடன் பத்தாவது நாளாகவும் தொடரும் மலைய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி நாளை (06) தலவாக்கலையில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளது.

அனைத்து தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், நிறுவனங்களையும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளம் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அழைப்புவிடுத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி எப்போதும் பின்னிற்கப் போவதில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் கொள்கையளவில் கூட்டு ஒப்பந்ததை ஏற்றுக்கொள்ளாவிடினும் கூட தொழிலாளரின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சுவார்தை நடத்தவும் தயார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலாளர் சம்பள பிரச்சினை தொடர்பில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவுற்ற நிலையில் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கூட்டு ஒப்பந்தம் காலாவதியாக சுமார் 18 மாதங்கள் நிறைவுற்ற நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி இன்றுடன் பத்தாவது நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்/ தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435