அனுபவம் வாய்ந்த ஆசிரிர்களுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா சம்பளத்துடன் பாகிஸ்தானில் வேலைவாய்ப்பு காணப்படுவதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
கணிதம், பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல், வர்த்தகம், பொருளியல் ஆகிய பாடங்களுக்கு 5 வருட அனுபவமுடைய ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தவிர, சிங்கப்பூரில் குழந்தை பராமரிப்பாளர்கள், பணிப்பெண்கள், குவைத்தில் சாரதிகள், தாதி உத்தியோகத்தர்கள், ஓமானில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், சமையற்காரர்கள், பஹ்ரைனில் தச்சன், மின்சார உபகர பழுபார்ப்போர், சாரதிகள், எத்தியோப்பாவில் உள்ள லண்டன் நிறுவனமொன்றில் கைத்தொழில் பேட்டை பணியாளர்கள் என்று பல வௌிநாட்டு வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாக பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் நாளை தொடக்கம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு, நாவல வீதி, நாராஹேன்பிட்ட, இல 12 இல் அமைந்துள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
மேலதிக தகவல்களை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளமான www.sitea.lk இல் பிரவேசித்து, அறிந்து கொள்ள முடியும். அதில் காணப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது 011 2807400, 071 4541463 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
பதிவுக்கட்டணம், மருத்துவக்கட்டணம் மற்றும் நிருவாக கட்டணம் என்பவற்றுக்காக சுமார் 45,000 ரூபா அளவில் மட்டுமே செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
மலேஷியாவில் 4000 உடனடி வேலைவாய்ப்புக்கள்
வேலைத்தளம்