கடந்த 18 மாதகாலமாக சம்பள உயர்வின்றி பொருளாதார சிக்கல்களை சந்தித்த தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வுடன் 18 மாத நிலுவை சம்பளமும் வழங்கப்பட வேண்டும் என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி. திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
டிக்கோயா போடைஸ் தோட்டம், கொனக்கல பிரிவில் சிறுவர் அபிவிருத்தி நிலையம் நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
வழமையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக 6500 ரூபா வழங்கப்படும். இம்முறை மேலதிகமாக 3500 ரூபா சேர்க்கப்பட்டு 10,000 ரூபாவாக வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவதாக கூறி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் இழுபறி நிலையில் இருந்து வந்தது. இன்று மக்கள் தமது உரிமைக்காக போராட ஆரம்பித்துள்ளனர். அம்மக்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் என் நன்றியை கூறிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
தோட்டத தொழிலாளருக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரி முஸ்லிம்,சிங்கள மக்களும் பண்டாரவளை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்