மத்திய மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு பட்டதாரி ஆசிரியர்களிடமிருந்த விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளன.
கணிதம், விஞ்ஞானம், வணிகம் ஆகிய துறை பட்டதாரிகளிடமிருந்தும் ஆங்கில டிப்ளோமாதாரிகளிடமிருந்துமே விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளனஎன்று மத்திய மாகாண அமைச்சர் எம். ரமேஸ் தெரிவித்துள்ளார். .
மத்திய மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை கவனத்திற் கொண்டு மேற்படி தீர்மானம் நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆங்கில பட்டதாரிகளை ஆசிரியர் துறையில் இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கலைத்துறை மாணவர்களையும் உள்ளீர்ப்பு செய்யுங்கள்(நாடகம்,நடனம்,இசை,ஓவியம்)