அரச அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது தற்போது மந்த நிலையில் இயங்கும் அமைச்சுக்களின் செயலாளர்களையும் திணைக்களத் தலைவர்களையும் பதவி விலக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று வருடக்காலப்பகுதியில் அரசாங்கம் வேகமான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள காரணத்தினால் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கையின் அபிவிருத்தி நிதியுதவி வழங்க முன்வந்துள்ள நிலையில் அமைச்சுக்களும் திணைக்களங்களும் மந்த நிலையில் இயங்குவதாக அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் எனவே அபிவிருத்திப் பணிகளை செயற்றிறன் மிக்கதாக நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு பதவி விலக்குவதற்கு அடையாளங்காணப்பட்ட உயரதிகாரிகள் அரச நிர்வாக சேவை அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.