வட மேல் மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண அமைச்சர் சந்தியா எஸ் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிலாபம் ஶ்ரீ வடிவாம்பிகை இந்து கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் ஆசிரியர் தெரிவுக்காக விண்ணப்பம் கோரும் போது தகுதியான விண்ணப்பங்கள் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. எனவே தமிழ் மாணவர்கள் தமது கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். இப்பிரதேசத்தில் இருந்து அதிக மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு மாணவர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். எமது மாகாணம் கல்வியில் பின்தங்கி நிற்பதற்கு தமிழ் மாணவர்களின் பெறுபேறும் ஒரு காரணம்.
எனவே பாடசாலை கல்வியை மேம்படுத்த அனைவரும் பாடுபடவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.