புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக நுழைவு கைநூல் எதிர்வரும் 24ம் திகதி வௌியாகும் என பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24ம் திகதி தொடக்கம் பல்கலைக்கழக நுழைவு கைநூலை நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் கைநூலை பார்வையிடலாம் என்றும் அதற்கமைய 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் எதிர்வரும் 24ம் திகதி தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவ்வாணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இம்முறை அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் ஊடாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். கற்க விரும்பும் துறைகளை வரிசை கிரமத்தில் குறிப்பிட்டு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பித்தல் வேண்டும். நாடு முழுவதும் உள்ள அறிவக கிளைகளில் இலவசமாக விண்ணப்பிக்கலாம் என்று ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
வேலைத்தளம்