அரச சேவையாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச சேவையாளர்களின் தொழிற்தரத்தை கவனத்திற் கொண்டு இரண்டாயிரம் தொடக்கம 16,000 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பள உயர்வானது எம்மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்று தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கடந்த வருடம் டிசம்பர் வரை 14,234 ரூபாவாக இருந்த தொழிலாளரின் சம்பளம் இரண்டாயிரம் நான்கு ரூபா அதிகரிப்பினூடாக 16, 238 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.
இதே வகையில் ஏனைய ஊழியர்களுக்கும் அவர்களுடைய சம்பள அடிப்படையில் உயர்வு வழங்கப்படும். வரவு செலவு 2017 முன்மொழிவுக்கமைய இச்சம்பள உயர்வு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.