இலங்கையில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 1177 ஆசிரியர்கள் இவ்வாண்டு கனிஷ்ட பிரிவில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வருடத்திற்கு பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை நீக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்வியமைச்சு இவ்வாறு கூறியுள்ளது.
ஏற்கனவே 1093 பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவு, சேமலாப நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் இணைத்துக்கொள்ளப்படும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கல், இடமாற்றங்களுக்கான தேசிய கொள்கைகளை உருவாக்குதல், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் தரப்படுத்தல் தொடர்பிலும் விரைவில் கவனம் செலுத்தப்படும் என்றும் கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.