இலங்கையில் பஸ் சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்தியாவில் இருந்து பஸ் சாரதிகளை அழைத்து சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குறைந்தபட்சம் ஆயிரம் சாரதிகளின் பற்றாக்குறை காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டிய அவர், சாரதிகள் இல்லாமல் அதிகளமான பஸ்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பஸ் உரிமையாளர்கள் தம்மிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிக வாகன நெரிசல் காரணமாக சாரதிகள் பஸ் சேவையில் ஈடுபட அக்கறை செலுத்தாமல் உள்ளனர். எனவே, சாரதிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்தியாவில் இருந்தாவது சாரதிகளைச் கொண்டு வந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். இது தொடர்பான யோசனையை அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ளதாக கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.