இலங்கையில் இன்னும் 60,000 ஆசிரியர்கள் அவசியம்

நாடு முழுவதும் சுமார் 60000 ஆசிரியர்களின் அவசியம் காணப்படுவதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.


மொரட்டுவ வேல்ஸ் இளவரசர் கல்லூரியில் நேற்று (06) நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கையில் சுமார் அறுபதாயிரம் ஆசிரியர்களுக்கான தேவை காணப்பட்ட போதிலும் நாற்பதாயிரம் ஆசிரியர்கள் தேவைக்கதிகமாக சில பாடசாலைகளில் பணியாற்றுகின்றனர்.

ஆசிரிய இடமாற்றங்கள் பாடசாலைகளுக்கு உரிய முறையில் நியமிக்கப்படாமையினால் இவ்வாறு நாற்பதாயிரம் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக சில பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர்.

பாடசாலை கட்டமைப்பில் அதிபர்களுக்கான பற்றாக்குறையை நீக்கும் நோக்கில் 3901 அதிபர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதேவிதமாக இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு நிலவி வரும் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435