வடக்கில் போராட்டத்தில் இறங்கவுள்ள ஆசிரியர் சங்கம்

இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் 13 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் வடமாகாணக்கல்வியமைச்சின் செயலாளர் அலுகத்துக்கு முன்னால் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இன்று (10) அறிக்கை வௌியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 10 ஆம் திகதி தை மாதம் தங்களது வெளிமாவட்ட சேவை நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் செயலாளரைத் தாக்கியதாகப் பொய்யான ஜனநாயக விரோத குற்றச்சாட்டுக்களை வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் சுமத்தி அடிப்படையான விசாரணைகள் எதுவுமின்றி மூன்று ஆசிரியர்களுக்கு பணித்தடை வழங்கப்பட்டது.

ஆனால், இன்று வரை அவ்வாசிரியர்களை மீள இணைத்துக் கொள்வது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளையும் வடமாகாணக் கல்வியமைச்சு மேற்கொள்ளவில்லை.

இந்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சரின் கவனத்துக்குக் கவனயீர்ப்பு மூலமாக கொண்டுவந்திருந்த நிலையிலும் அதற்கான பதிலைக் கடந்த திங்கட்கிழமை வழங்குவதாகக் கூறிய நிலையிலும், முதலமைச்சரின் செயலகம் எவ்விதமான சாதகமான பதிலையும் வழங்கவில்லை.

வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளரால் பொலிஸில் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டில் கூடச் செயலாளரால் குற்றங்களை நிரூபிக்க முடியாத நிலையில் சமரசத்தில் முடிந்துள்ளது. பொலிஸாரின் முறைப்பாட்டில் தன்னை தாக்கியதாக முறைப்பாடு செய்த ஆசிரியரின் பெயர் தவறானது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அப்படியாயின் அந்த ஆசிரியருக்கு ஏன் பணித்தடை வழங்கப்பட்டது? அதேவேளை பொலிஸில் செயலாளரால் தன்னைத் தாக்கியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிலும் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரால் செயலாளரின் கொலரைப் பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலும் உள்ள முரண்பாடுகளே ஆசிரியர்கள் மத்தியில் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளராலும், வடமாகாணக் கல்விப் பணிப்பாளராலும் வேண்டுமென்றே சுமத்தப்பட்ட பழி தீர்க்கும் நடவடிக்கை என்பது நிருபணமாகியுள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன், இடமாற்றச் சபையில் தீர்மானிக்கப்பட்ட பல விடயங்களை நடைமுறைப்படுத்தாமல் ஏனைய தீர்மானங்களுடன் தொடர்புடைய வெளிமாவட்டக் கல்வித் தொடர்பாகச் சிந்திக்காமல் அங்கு நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்தவர்களை விடுவிக்காமல் விட்டது.

இடமாற்றச் சபையின் தீர்மானம் என எமது தொழிற்சங்கத்தினையும் சாடி வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் தப்பிக்க முயற்சிக்கின்றார். எனவே, வடமாகாணக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகள் விசாரிக்கப்பட வேண்டும்.

எனவே, வடமாகாண கல்வியமைச்சினால் நடாத்தப்பட உள்ள இந்த போராட்டத்தை ஒன்றிணைந்து பலம் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435