வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் காலவறையரையற்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று (02) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளனர். இந்த நிலையில், இவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டத்தை வடமாvகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் முன்னெடுத்து வருகின்றது. பட்டப்படிப்பை நிறைவு செய்த தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி, நூற்றிற்கும் அதிகமான பட்டதாரிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தாங்கள் படித்ததற்கான வேலை வாய்ப்பை மாத்திரமே கேட்பதாகவும் வேறு எதனையும் கேட்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வாக்குறுதிகளை கேட்டுக்கேட்டு ஏமார்ந்து போயுள்ளதாகவும் இதுவே தமது இறுதி போராட்டம் என்றும் வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டுமானால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எழுத்துமூலம் பதில் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.