தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு பட்டதாரிகளின் பிரச்சினைக்கு நாளை (04) வட மாகாணம் செல்லும் ஜனாதிபதி தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும் என்று வட மாகாண பட்டதாரிகள் கோரியுள்ளனர்.
இன்று (03) ஐந்தாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்ற நிலையில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், தமக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும்வரை காலவரையறையற்ற போராட்டம் தொடரும் என யாழ். வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
நூற்றிற்கும் அதிகமான பட்டதாரிகள் இரவு, பகலாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தொடர்பாக நாளை (04) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி கவனம் செலுத்தி தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.