வடமாகாண அமைச்சுக்கள், திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை வேலையற்ற பட்டதாரிகளை கொண்டு நிரப்புவது குறித்து ஆராய எதிர்வரும் 13ம் திகதி வடமாகாண ஆளுநரை ச ந்திக்க வடமாகாணசபை உறுப்பினர்களும் பட்டதாரிகளும் தீர்மானித்துள்ளனர்.
வடமாகாண பட்டதாரிகள் கடந்த 10 நாட்களாக தமது நிரந்தர நியமனத் தை வழங்ககோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக 11ம் நாளான நேற்று காலை (09) வடமாகாணசபைக்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை நடத்தியதுடன், பட்டதாரிகளின் பிரதிநிதிகள் 7 பேர் கொண்ட குழு மாகாணசபை அவை தலைவர் மற்று ம் அமைச்சர்கள், உறுப்பினர்களை ச ந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்த கலந்துரையாடையடுத்து மேற்ப டி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இத ன்படி எதிர்வரும் 13ம் திகதி வடமாகா ண ஆளுநரை மாலை 3 மணிக்கு பட் டதாரிகளின் பிரதிநிதிகள் மற்றும் அ வை தலைவர், அமைச்சர்கள், உறுப் பினர்கள் சிலர் கூடி பேசி வடமாகா ண அமைச்சிக்களில் உள்ள வெற்றிட ங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டடுள்ளது.