கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 47 பேருக்கு மருந்துகலவையாளர்கள் நியமனங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் நேற்று (20) வழங்கினார்.
கிழக்கு மாகாணம் முழுவதும் சுமார் 59 மருந்து கலவையாளர் வெற்றிடங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், தீவிர முயற்சியின் பின்னரே மருத்துவமனைகளில் நிலவிய மேற்படி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கமைய இடத்திற்கேற்றாற் போல தமது கடமைகளை ஒழங்காகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும் என்று இதன்போது அமைச்சர் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.முருகானந்தன், செயலாளர் கருணாகரன், உதவிச்செயலாளர் உசைனுடீன், மேலதிக மாகாணப்பணிப்பாளர் லதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.