மேன்பவர் பணியாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண மேன்பவர் நிறுவனத்திடமிருந்து ஊழியர் சேபலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை அறிவிடும் முறைமையொன்றை அறிமுகம் செய்வது குறித்து ஆராயந்து வருவதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.
மேன்பவர் பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்து எமது இணையத்தளம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேன்பவர் சேவையாளர்களின் பிரச்சினை நாடு முழுவதும் காணப்படுகிறது. தம்மை நிரந்தரமாக பதிவுசெய்யுமாறு அவர்கள் கோருகின்றனர். ஆனால், மேன்பவர் சேவையாளர்களை நிரந்தரமாக பதிவுசெய்ய முடியாத நிலைமை காணப்படுகிறதாக அவர் குறிப்பிட்டார்.
ஏனெனில், அவர்களை ஒவ்வொரு நிறுவனம் தொழிலுக்கு எடுக்கின்றது. இரண்டு நாட்கள் தொழில் வழங்கபட்டுகின்றது. பின்னர் தொழில் இல்லை என்றவாறு அவர்களின் தொழில் நிலைமை காணப்படுகிறது. இதில் பெரிய பிரச்சினை உள்ளது. அவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். மின்சார சபையின் ஒரு பிரிவினர், தொலைத்தொடர்புகள் சேவையில் ஒரு தரப்pபினரும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பெரும்பாலானோர் பல வருடங்களாக பணி புரிவதாக கூறுகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஊழியர் சேபலாப நிதியோ, ஊழியர் நம்பிக்கை நிதியோ வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில், இது தொடர்பில் ஒரு முறைமையொன்றை உருவாக்க அமைச்சு மட்டத்தில் தாம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைசச்ர் கூறினார்.
மேன்பவர் சேவையாளர்கள் தொடர்ச்சியாக பணியாற்றுகிறார்கள் எனக் குறிப்பிட்டே ஊழியர் சேபலாப நிதியோ, ஊழியர் நம்பிக்கை நிதியோ வழங்க முடியாது என்ற பிரச்சினைகள் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், மேன்பவர் நிறுவனத்திடமிருந்து ஊழியர் சேபலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை அறிவிடும் முறைமையை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். தங்களிடம் இருக்கும் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேன்பவர் நிறுவனம், ஊழியர் சேபலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை செலுத்த வேண்டும் என்ற முறைமையை உருவாக்க தாம் எதிர்பார்க்கின்றதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேன்பவர் நிறுவனத்தை எமது திணைக்களத்தின் கீழ் பதிவு செய்து ஊழியர் சேபலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை செலுத்துமாறு நாம் கூறுவோம். இதற்கு மேன்பவர் நிறுவனம் உடன்பட்டால், மேன்பவர் பணியாளர்களுக்காக வழங்கப்படும் ஊழியர் சேபலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை எம்மால் வழங்க முடியும். இது பற்றி பேச்சுவார்ததைகள் இடம்பெறுகின்றன. இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.