வடக்கு பட்டதாரிகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல்

பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான அவசர கலந்துரையாடலொன்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை(15) பிற்பகல்- 03 மணி முதல் நல்லூர் கோவில்

வீதியில் அமைந்துள்ள அங்கஜன் இராமநாதனின் பிரதான அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர், சிறீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கச் செயலாளர், ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு நியமனம் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயவுள்ளமையால் அனைத்துப் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கேட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்க நியமனத்தில் உள்வாங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பொருட்டு ஜனாதிபதியின் பட்டதாரிகள் சங்கப் பொதுச்செயலாளர் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் காலவரையற்ற போராட்டம் மேற்கொண்டு வரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

தமிழ் வின்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435