மே முதல் வாரத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பு

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மே மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள், ஒரு நாளில் நாடாளாவிய ரீதியில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கத்தின் பிரதிநிதியான வைத்தியர் நலிந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை நியாயப்படுத்தும் வகையில், அரசாங்கத்தின் பணத்தைச் செலவு செய்து விளம்பரங்கள் செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, அரசாங்கத்தின் பணத்தை செலவு செய்து தனியார் நிறுவனம் விளம்பரப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் ஒரு நாளில் முழு நாட்டையும் நாம் ஸ்தம்பிதமடையச் செய்ய உள்ளோம்.

இதனூடாக அரசாங்கத்துக்கு எச்சரிக்கையுடனான செய்தியை வழங்க உள்ளோம்.

இந்த எச்சரிக்கையை அரசாங்கம் கருத்திற்கொள்ளாவிட்டால், மே மாதம் 9 ஆம் திகதி விசேட கூட்டமொன்றை நடத்தி, தொடர் போராட்டம் குறித்து தீர்மானம் எடுப்போம் என வைத்தியர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு ஆசிரியர், சுகாதார மற்றும் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435