வடக்கு பட்டதாரிகள் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

மாகாணத்திலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் காலம் தாமதிக்காது உடனடியாக அரச நியமனங்கள் வழங்குமாறு கோரி வடக்கு பட்டதாரிகள் நாளை  (06) காலை 8.00 மணிக்கு யாழ் செயலகத்தின் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளனர்.

அரச நியமனங்கள் வழங்குமாறு கோரி வடக்கு பட்டதாரிகள் ஆரம்பித்த காலவரையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்றுடன் 100வது நாளை எட்டயுள்ள நிலையில் இக்கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், நிரந்தர நியமனங்கள் வழங்க கோரி நாம் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பித்து நூறு நாள் பூர்த்தியடைந்துள்ள நிலையிலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வை மத்திய அரசு இதுவரை முன்வைக்கவில்லை.

கடும் வெயில், மழை, வாகன புகை, இரைச்சல் என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நாம் எமது போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் உடல், உளரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு நாங்கள் முகங்கொடுத்துள்ளோம். இந்நிலையில் எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில் அனைத்து பட்டதாரிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வொன்றினை மத்திய அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

போராட்டத்தின் இறுதியில் அனைத்து பட்டதாரிகளின் விபரங்கள் சேர்க்கப்பட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செல்லும் வகையில், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண ஆளுநர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், ஆகியோருக்கு மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன.

இம்மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து வடக்கு பட்டதாரிகளும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435