கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக 259 வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் இன்று (15) வழங்கப்பட்டது.
இந்த நியமனங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் திருகோணமலை மாவட்டத்தில் வழங்கிவைக்கப்பட்டது.
இதன் போது தமிழ், சிங்களம் மற்றும் வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இதன் போது கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்பட்டன,
கிழக்கு மாகாண முதலமைச்சர், பிரதமருடன் நடத்திய தொடர்ச்சியான பேச்சுவார்ததைகளின் அடிப்படையில், கிழக்கில் ஆயிரத்து 700 பட்டதாரிகளை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இந்த நிலையில் அதன் முதற்கட்டமாக 259 பேருக்கான நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 890 இற்கும் மேற்பட்டோருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.