இடமாற்ற உத்தரவின் பேரில் உள்ள அனைத்து தாதிகளையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்குள் விடுவிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.
நாராஹேன்பிட்டயில் அமைந்துள்ள தேசிய குருதி மாற்று மத்திய நிலையத்தில் சுகாதார அமைச்சர் தலைமையில நேற்று (24) நடைபெற்ற மாகாண சுகாதார அமைச்சர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்
மே முதலாம் திகதி தொடக்கம் செயற்படுத்துமாறு பணிப்புரை விடுத்திருந்த போதிலும் செயற்படுத்தாமையினால் உடனடியாக செயற்படுத்துமாறும் அவ்வாறு செயற்படுத்தாத பணிப்பாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் பதில் பணிப்பாளர் நாயகம் (தாதியர் நிர்வாகம்) எல்.பீ.எல் ரகுமானுக்கு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இடமாற்ற உத்தரவை பெற்ற அனைவரும் உரிய இடங்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி செல்லாவிட்டால் வேலையை இழப்பர் என்றும் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.