
தபால் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சரவை விசேட குழு வழங்கியுள்ள முன்மொழிவை நிராகரிப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் முன்னணி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க தவறும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கள் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக்க பண்டார அமைச்சரவை விசேட குழு வழங்கியுள்ள முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளமையினால் தமது சங்கம் நிராகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.