வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கு மத்திய மாகாணத்தில் வாய்ப்பு?

வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கு ஐந்து வருட ஒப்பந்தத்துடன் மத்திய மாகாணத்தில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய மாகாண தமிழ் கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் எம். ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிதாக நியமனம் பெற்ற மத்திய மாகாண பட்டதாரிகள் பணிக்கு செல்வதில் அசிரத்தையுடன் செயற்படுவதாக விசனம் தெரிவித்துள்ளார்.

மேலும், நியமனம் வழங்குமாறு வடக்கு கிழக்கு பட்டதாரிகள் நீண்டகாலம் போராட்டம் செய்து வாய்ப்பினை தற்போது பெற்றுள்ளனர். எனினும் எவ்வித போராட்டமும் இன்றி வாய்ப்பினை பெற்றுக்கொண்ட மத்திய மாகாண பட்டதாரிகள் பாடசாலைகளுக்கு செல்லாமல் பின்வாங்குகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமைய குறித்த நியமனங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி கிடைக்கப் பெற்றது. 2000 இற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வாய்ப்பிருந்தபோதிலும் 742 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

நியமனங்கள் வழங்குமாறு கோரி வடக்கு கிழக்கு பட்டதாரிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்னும் அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை. தற்போதுதான் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனினும் மத்திய மாகாண பட்டதாரிகளுக்கு எவ்வித போராட்டமும் இன்றி கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தாதுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435