புதிய வரிச்சட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கு வரிவிதிப்பு முன்மொழிவை நீக்காவிட்டால் வீதிக்கு இறங்கவேண்டிய நிலை ஏற்படும் என்று தேசிய தொழிற்சங்க முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த முன்மொழிவு பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டாலும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக தொழிலாளர் சமூகம் எழும் என்று சங்கத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.