நில அளவையாளர் திணைக்களத்தில் 259 அளவையாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பட்டபோதிலும் 120 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்று அளவையாளர் தொழிற்சங்கம் விசனம் வௌியிட்டுள்ளது.
இவ்வாறு ஆட்பற்றாக்குறை காணப்படுவதனால் பணிகளை உரிய நேரத்தில் செய்து முடிப்பதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுவதுடன் தற்போது பணியில் உள்ளவர்களுக்கும் ஓய்வு கிடைப்பதில் பிரச்சினைகள் நிலவுவதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுமார் இருபது வருடங்களாக குறித்த திணைக்களத்தில் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லையென்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்- மவ்பிம
வேலைத்தளம்