ஆசிரியர் தினத்தில் ஆசிரியர் சங்கம் கொழும்பில் போராட்டம்

சர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06)  கொழும்பில் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் – அதிபர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில்  கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம்  கல்வி தொடர்பான பிரசாங்களை மேற்கொண்டுள்ளதே தவிர பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்கவில்லை.

கடந்த 2014. 10. 22 திகதி யாப்பிற்கமைய புதிய ஆசிரியர் அதிபர் சேவை யாப்பிற்கமைய பதவியுயர்வுகள் வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள போதிலும் இதுவரை சம்பள உயர்வு நிலுவையிலேயே உள்ளது.

ஆசிரியர் செயலமர்வு கொடுப்பனவிலும் பிரச்சினை உள்ளது. இவற்றுக்கு தீர்வ காணாமல் வெறும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதில் அரசாங்கம் கவனமாயுள்ளது.

எனவே, பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமாறு கோரி இன்று கொழும்பு கல்வி வலயத்தில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். கொண்டாட்டங்கள் அல்ல, பிரச்சினைக்கு தீர்வே எமக்கு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435