தேசிய கல்விக் கல்லூரிகளில் டிப்ளோமா பூர்த்தி செய்த 3645 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 20ம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது என கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உட்பட அனைத்து பிரதேசங்களிலும உள்ள 20 தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2014ம் ஆண்டு கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்டு 2017ம் ஆண்டில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
தமிழ் மொழி மூலம் கல்வியியல் டிப்ளோமாவை பூர்த்தி செய்த 1200 பேர் நியமனம் பெறவுள்ளனர்.
வட மாகாண தேசிய கல்வியியற் கல்லூரியில் 877 பேரும் கிழக்கு தேசிய கல்வியியற் கல்லூரியில் 360 பேரும் தர்கா நகர கல்வியியற் கல்லூரியைச் சேர்ந்த 147 பேரும் தமிழ் மொழி மூல டிப்ளோமாவை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.