தேசிய பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளை நியமிப்பதனூடாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பின்தங்கிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கே கல்வியிற் கல்லூரி டிப்ளோமாதாரிகளை நியமிக்கவேண்டும். இவ்வாறு உடனடியாக தேசிய பாடசாலைகளுக்கு புதிய நியமனம் வழங்குவதனூடாக ஏற்கனவே பின்தங்கிய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய பாடசாலைகளில் கற்பிக்கும் உரிமை தட்டிப்பறிக்கப்படுகிறது. இது நியாயமற்ற செயல்.
கல்வி அதிகாரிகள் 1200 டிப்ளோமாதாரிகளை தேசிய பாடசாலைகளுக்கு நியமித்துள்ளனர். இது பிரச்சினைக்குரிய விடயம் என்று ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.