சமய பாடங்களை கற்பிப்பதற்காக 2634 பேரை ஆசிரியர் சேவையில் உள்வாங்க பொதுச்சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
சமயசார் பரீட்சையில் சித்தியடைந்தோர் மற்றும் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்தோர் இச்சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
சைவம், கத்தோலிக்கம், இஸ்லாம் மற்றும் பௌத்த சமய பாடத்திற்கான ஆசிரியர்களே புதிதாக சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நியமன உள்வாங்கல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் இரு வாரங்களில் வௌியாகும் என்றும் மாகாண பாடசாலைகளில் சமயம் கற்பிப்பதற்காக 1989 பேரும் தேசிய பாடசாலைகளில் கற்பிப்பதற்காக 645 பேரும் சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் என்பன இதற்கு உள்வாங்கப்படமாட்டாது என்றும் இது தொடர்பில் அம்மாகாணங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெற்கு மற்றும் மேல் மாகாணம் தொடர்பில் இதுவரை எதுவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.