பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களை தரம் 3-2 உள்வாங்க எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
வேதன அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி, நீண்டகாலமாக போராட்டங்களை நடத்தி வருகின்ற பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்கள், கல்வி அமைச்சுக்கு முன்னால் நேற்று (29) போராட்டம் ஒன்றை நடத்தினர்.
கோப்பாய், அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு மற்றும் கொட்டகலை முதலான ஆசிரியர் கலாசாலையைச் சேர்ந்த பெருமளவானோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இது குறித்த விபரங்களை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உதவி ஆசிரியர் ஒருவர் வழங்கினார்.