கைத்தொழில் மற்றும் நிர்மாணத்துறை பிரிவில் பயிற்சியை பூர்த்தி செய்த பின்னர் தொழில்வாய்ப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கைத்தொழில் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இன்று (30) பாராளுமன்றில் வாய்மூல கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதில் 166025 பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 63603 பேர் தொழில் வாய்ப்பினை பெற்றுள்ளனர். அதிலும் கைத்தொழில் மற்றும் நிர்மாணத்துறைகளில் 79326 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு 63603 தொழில் வாய்ப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த இரு வருடகாலத்தில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் ஆளணி தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை. அதனால் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.