இன்று ரயில்வே தொழிற்சங்க விசேட கூட்டம்

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக ரயில்வே சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு இன்று (11) ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுடன், ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கு இடையில் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீவிர்வின்றி நிறைவடைந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை சுமார் நான்கு மணிநேரம் நீடித்துள்ளது.

எனினும், இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ரயில்வே சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு இன்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவி;த்துள்ளார்.

சம்பள பிரச்சினை மற்றும் ஆட்சேர்ப்பு முறைமை உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்து ரயில்வே பணியாளர்கள் கடந்த 7ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.

இதையடுத்து, போக்குவரத்து அமைச்சின் செயலாருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு காணப்படவில்லை.

பின்னர், ஜனாதிபதி செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் இணக்கம் ஏற்படவில்லை.

இதனிடையே, ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைச்சாத்திட்டார்.

இதையடுத்து, ரயில்வே பணியாளர்கள் அனைவரும், இன்றைய தினம் (11) பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என ரயில்வே திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

இன்று பணிக்கு சமுகமளிக்காதவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களாக கருத்தப்படுவார்கள் என்றும் ரயில்வே திணைக்களம் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பு குறித்து தீர்மானமொன்றை மேற்கொள்ள ரயில்வே சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு இன்று மாலை விசேட கலந்துரையாடலை நடத்தவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435