ரயில்வே திணைக்களத்தின் நிர்வாக, ஊதிய மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகள் தீர்ப்பதற்காக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரின் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பணியாளர்கள் சிலரினால் மேற்கொள்ளப்பட்;ட பணிப்புறக்கணிப்பு தொடர்பில் உரிய நபர்களுடன் கலந்துரையாடி முடிவொன்றினை எடுப்பதற்காக விசேட பணிப்பொறுப்புகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டள்ளது.
அத்துடன், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினையும் நியமிப்பதற்கு சென்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி செயற்பட்ட குறித்த குழு இப்பிரச்சினையினை தீர்ப்பதற்காக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்கும், ரயில்வே, சுகாதார மற்றும் கல்வி சேவைகளை ஒன்றிணைந்த சேவையான மீண்டும் தயாரிக்க வேண்டியுள்ளதாகவும் தமது சிபார்சுகளை முன்வைத்தது.
இதனடிப்படையில், அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவைக்கு சிபார்சுகளை முன்வைப்பதற்காக அவ் அமைச்சரவை உப குழுவிடம் தொடர்ந்து கேட்டுக் கொள்வதற்கும், அதற்கு ஒத்துழைப்பிற்காக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரின் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.