வீட்டுப் பணியாளர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதியம்

வீட்டுப் பணியாளர்களுக்கும் எதிர்காலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தை வழங்குவதற்கு தேவையான சட்ட நகல் வரவை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பொலனறுவை மாவட்ட தொழில் திணைக்கள அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான வீட்டுப்பணியாளர்களுக்கு இதுவரை காலம் இல்லாதிருந்த உரிமைகள் பலவற்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அதற்கு இணங்க ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஆகியவற்றை செலுத்த வேண்டி வரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வீட்டுப் பணியாளர்கள் விபத்துக்களில் சிக்கினால் இதுவரை காலம் அவர்களுக்கு தொழிலாளர் நட்ட ஈடு வழங்கப்படவில்லை. புதிய சட்டத்தின்படி இந்த உரிமையும் கிடைக்கும்.

உழைக்கும் மக்களுக்கு உரித்தான சகல தொழிலாளர் உரிமைகளையும் வீட்டுப் பணியாளர்களுக்கும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435