விமான நிலைய பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

1994ம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பு வழங்கப்படுவதுடன், அதன்படி இந்த ஆண்டு 10,000 ரூபா வேதன அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறி விமான நிலைய பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க மற்றும் நிதி மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்ன ஆகியோருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கான வேதனத்தை 10,000 அதிகரிப்பது தொடர்பில் கடிதம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனம் மற்றும் விமானநிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொழிற்சங்கத்திற்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்தே இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விமானநிலையத்தின் அனைத்து நுழைவாயில்களையும் போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தமையால் விமானநிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த நிலையில், 10,000 ரூபா வேதன அதிகரிப்பு வழங்க அரசாங்க தரப்பால் இணக்கம் தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்;தினர் அறிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435