புலம்பெயர் தொழிலாளர்களை ஏமாற்றும் மோசடி

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை ஏமாற்றும் அமைப்புகள் தொடர்பாக தகவல்கள் கிடைத்து வருவதால், அவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டில் தொழில் புரியும் நபர்களை பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரில் போர்ன் கிளப் என்று அழைக்கப்படும் நிறுவனங்கள் ஊடாக இத்தாலி, பிரான்ஸ் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் மற்றும் அங்கு தொழில் புரியும் இலங்கையர்களை இலக்கு வைத்து நிதி மோசடி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு வசதிகளை செய்து கொடுப்பதாகவும் குறிப்பாக வீடுகளை நிர்மாணித்து தருவதற்கான நிதியம் என கூறி, இந்த குழுக்கள் மக்களை ஏமாற்றி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இது சம்பந்தமாக தகவல்களோ, முறைப்பாடுகளோ இருக்குமாயின் அது குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி முகாமையாளரை நேரில் சந்தித்து வழங்க முடியும்.

முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வழங்குவோர் தொடர்பான இரகசியம் பேணப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435