சட்டப்படி வேலையில் மின்சாரசபை பொறியிலாளர் சங்கம்

இலங்கை மின்சாரசபையினால் நீண்ட காலத்தை கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்ட திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு கூறி இலங்கை மின்சாரசபையின் பொறியிலாளர் சங்கம் ‘சட்டப்படி வேலை’ தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (08) மாலை தொடக்கம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று தொடக்கம் சட்டப்படி வேலை தொழிற்சங்கநடவடிக்கை செயற்படுத்தப்படவுள்ளதுடன் இலங்கை பொதுப்பாவனைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினுடனான அனைத்து விதமான கடமை பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அச்சம் அறிவித்துள்ளது.

இலங்கை மின்சாரசபையினால் தயாரிக்கப்பட்ட நீண்டகால பொதுத்திட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பதை தடுக்க இயலாது என்றும் பொறியிலாளர் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435