பெண்கள் பாதுகாப்பான ஒழுங்குபடுத்தப்பட்ட பொதுப்போக்குவரத்து முறையை அவசியத்தை வலியுறுத்துவது குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு
இலங்கையில் உள்ள பெண்களில் 90 சதவீதமானவர்கள் பொதுபோக்குவரத்தின் போது துஷ்பிரயோகங்களுக்குள்ளாகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியம் கடந்த 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலை பெண்களின் திறமைகளை வளரவிடாமல் செய்யும் காரணிகள் ஒன்றாக காணப்படுகிறது. அத்துடன் குறிப்பாக பெண்பிள்ளைகளின் கல்விக்கும் பெண்கள் தொழிலுக்கு செல்வதிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான பொதுபோக்குவரத்து சேவையை ஏற்படுத்திக்கொடுப்பது நாட்டின் முன்னேற்றத்தை காட்டும் ஒரு அம்சமாகும்.
பொதுப்போக்குவரத்தின் தரம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் இந்நிலைமையை மேம்படுத்துவதற்கு உந்து சக்தியாக காணப்படுகிறது. அண்மையில் பஸ் மற்றும் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. ரயில் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது. இச்சூழலில் தரமான பஸ் சேவையை வழங்குவது தொடர்பில் பொறுப்பான தரப்பினருக்கு அழுத்தம் செலுத்துவது ஊடகவியலாளர்களின் தலையாய பொறுப்பாகும்.
மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் அறிவு, திறமை மற்றும் சிந்தனைகளை பரிமாறிக்கொள்வதற்கான ஊடக செயலமர்வு ஐநா சனத்தொகை நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திகதி – ஜூன் 13 புதன்கிழமை
நேரம் – மு.ப 8.30 – பி.ப 1.30 வரை
இடம் – 8.30 மணிக்கு பொதுப்போக்குவரத்து பிரயாண அனுபவங்கள் தொடர்பான செயன்முறை நாடக செயலமர்வு கொழும்பு 7, பௌத்தாலோக்க மாவத்தை, இலக்கம் 202 -204இல் அமைந்துள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. செயலமர்வு கொழும்பு 4, களிபட் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒசோ ஹோட்டலில் (Ozo Hotel) நடைபெறும். ஐநா தலைமையகத்தில் இருந்த போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. (தனியார் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்க)
மொழி – சிங்களம்
பங்குபற்றுநர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் https://goo.gl/XVc8Tf என்ற இணையதளத்தினூடாக அல்லது 071 754 4225 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக கசுன் என்பவரை தொடர்புகொண்டு முன்கூட்டியே பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.