125 மில்லியன் ரூபா நட்டம்: அஞ்சல் துறையினருக்கு எச்சரிக்கை

விடுமுறை ரத்துச்செய்யப்பட்டுள்ளதால் இன்று (19) சேவைக்கு சமூகமளிக்காத அனைத்து பணியாளர்களும் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவர் என அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் அஞ்சல் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமை காரணமாக தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அஞ்சல் மா அதிபர் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஆட்சேர்ப்பு முறைமையில் றிலவும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் பணியாளர்கள் முன்னெக்கும் போராட்டம் இன்று 9ஆவது நாளாக தொடர்கிறது.

இந்த நிலையில், அஞ்சல் பணியாளர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து நேற்று மதியம் கொழும்பில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் நுழைய முற்பட்டனர். இதன்போது , தொழிற்சங்க உறுப்பினர்கள் 7 பேருக்கு ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர், ஜனாதிபதி உதவி செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

எனவே, தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்;ளார்.

இதேவேளை, அஞ்சல் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக அஞ்சல் திணைக்களத்திற்கு 125 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக சேவையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவு, வேதனம் மற்றும் ஏனைய சேவைகள் உள்ளடங்களாக இந்த நட்டம் பதிவாகியுள்ளதாக அஞ்சல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அஞ்சல் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாளொன்றுக்கு 15 கோடி ரூபாய் திணைக்களத்தில் நட்டம் ஏற்படுவதாக அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நேற்றைய தினம் வரை சுமார் 50 கோடி ரூபாய் வருமானம் அஞ்சல் திணைக்களத்திற்கு கிடைக்காது போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435