தாம் பணியாற்றும் அலுவலகத்திற்கு சேவைக்காக பிரசன்னமாக முடியாது போனால், பணியாளர்கள் அருகில் உள்ள அஞ்சல் அதிகாரி அலுவலகத்திற்கு சேவைக்காக வருகை தருமாறு அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு பிரசன்னமாகும் சேவையாளர்களுக்கு தேவையான வாகன போக்குவரத்து வசதிகளும் செய்துக் கொடுக்கப்படும் என அறிக்கை ஒன்றின் ஊடாக அஞ்சல் மா அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
பணிகளுக்கு திரும்பும் சேவையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சல் தொழிற்சங்கத்தினருக்கும், வேதன நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்மானமின்றி முடிடைந்துள்ளது.
இந்த நிலையில் தமது போராட்டம் 16வது நாளாக இன்றும் தொடர்ந்து இடம்பெறும் என ஒன்றிணைந்த அஞ்சல் சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.