அஞ்சல் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது

அஞ்சல் துறை பணியாளர்கள் கடந்த 16 நாட்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு நேற்று மாலை (26) முதல் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கமைய அடுத்த மாதம் 7ஆம் திகதிவரை குறித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வேதன உயர்வு மற்றும் அஞ்சல் சேவையுடன் தொடர்புடைய சேவை யாப்பை தயாரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் தொழிற்சங்கத்தினர் குறித்து பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் வேதன நிர்ணய ஆணைக்குழுவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து, பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் திகதி, தமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால் மாத்திரமே பணிப்புறக்கணிப்பை முழுமையாக கைவிடுவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதியாகும்போது, தமது பிரச்சினைகளுக்கு நிர்ந்தர தீர்வு கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435