அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (3) காலை எட்டு மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அந்த சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்கே, மருத்துவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். அதில் குறிப்பாக மருத்துவர்களுக்கான கொடுப்பனவு, வாகன சலுகை உட்பட பல பிரச்சினைகள் அடங்குகின்றன.
இந்த நிலையில் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலருக்கு தெரியபடுத்தப்பட்டது. எனினும் அதற்கான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்தே குறித்த போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.