இளம் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் காரியாலயத்தின் கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்படும் துருணுதிரிய இலங்கை வங்கி கடன் திட்டத்தின் கீழ் இதுவரையில் 47 இளைஞர் யுவதிகளுக்கு 21 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி வௌியிட்டுள்ள திட்ட முன்னேற்ற அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடை உற்பத்தி, அழகுகலை, நிர்மாணத்துறை, தொழில்நுட்ம் மற்றும் கைத்தொழில், புகைப்படத்துறை போன்ற பல்வேறு துறைகளில் சம்பந்தப்பட்டுள்ள இளைஞர் யுவதிகள் இக்கடனுதவியைப் பெற தகுதி பெற்றிருந்தனர். 39 சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவுகளுனூடாக இதுவரை 330 வர்த்தக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதுடன் சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிக எண்ணிக்கையான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இலங்கை வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டப்படிப்பு அல்லது தொழிற்கல்வி சான்றிதழுடன் சிறு அளவு சுயதொழிலை ஆரம்பிப்பதற்கு பிணையற்ற/ இலகுத்தன்மையுடன் கூடிய பிணை முறையினூடாக இத்திட்டத்திட்டதினூடாக கடன் வழங்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட, மாகாண காரியாலயங்களுடன் இணைந்து பிரதமர் காரியாலயத்தின் கொள்கை அபிவிருத்தி அலுவலகம் இத்திட்டத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.