அரச சேவையினரின் சம்பள மீளாய்வு தொடர்பான விசேட ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
எஸ்.ரனுக்கே மேற்படி ஆணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.தங்கமயில் என்ற தமிழர் ஒருவர் இந்த ஆணைக்குழுவில் உள்ளடங்குகிறார்.
அரச சேவையினரின் சம்பள மீளாய்வு தொடர்பான இந்த விசேட ஆணைக்குழு, தமது பணிகளை நிறைவேற்றுவதற்கு இரண்டு மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரச சேவையினரின் சம்பள மீளாய்வு தொடர்பான விசேட ஆணைக்குழுவிற்கு நான்கு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
1. அரச சேவையினரின் சம்பளங்கள் மற்றும் படிகள் குறித்து தற்போது நடைமுறையிலுள்ள வேதன சுற்றறிக்கை ஏற்பாடுகள் மீது கவனம் செலுத்தி, தொடரூந்து திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவச் சேவைக்கு உததேசிக்கப்பட்டுள்ள வேதன அளவுத் திட்டத்தை வழங்கும்போது ஏற்படும் அழுத்தங்களை ஆராய்தல் மற்றும் அதன்மூலம் ஏற்படும் பிரச்சினைகளைத் தீPர்ப்பதற்கான திறன்முறைகளை முன்மொழிதல்.
2. அண்மையில் சம்பளங்கள் மற்றும் படிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட தொடரூந்து சேவை, சுகாதாரம், உயர்கல்வி மற்றும் கல்வி, தபால் சேவை ஆகிய துறைகளுக்காகத் தற்போது நடைமுறையிலுள்ள வேதன சுற்றறிக்கைகளின் மூலம் முரண்பாடுகள் எதுவும் ஏற்பட்டிருப்பின் அவற்றைக் குறைப்பதற்காகத் தீர்வுகளை முன்மொழிதல்.
3. நாடளாவிய சேவைகளுக்குரிய சம்பள பிரச்சினைகள் போன்று, மேற்கொள்ளப்பட்டுள்ள வேதன அதிகரிப்புகள் காரணமாகத தற்போது எழுந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள வேதன முரண்பாடுகளைக் குறைப்பதற்கு உரிய பரிந்துரைகளை சமர்ப்பித்தல்.
4. சமமான பொறுப்புக்கள் வகிக்கும் அல்லது அதை ஒத்த தகைமைகளுடன்கூடிய தொழில் புரிபவர்களினால் அரசாங்க மற்றும் பகுதி அரசாங்கத் துறைகளில் பெறப்படும் வேதனங்கள் மற்றும் படிகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளைக் குறைப்பதற்காக வழிகாட்டும் வேதன கட்டமைப்புகள் தொடர்பில் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அந்த வர்த்தமானி அறிவித்தலை தமிழில் பார்வையிட கீழ்காணும் இணைப்பை அழுத்தவும்