கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருந்துவ கழிவுப்பொருட்களால் ஏற்பட்டுள்ள நிலைமை

மருத்துவ கழிவுப் பொருட்களை வெளியேற்ற முடியாத காரணத்தால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் பெரும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நோயாளர்களும், மருத்துவமனை பணியாளர்களும் சுகாதார ரீதியான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி உள்ளனர்.

நாளாந்தம் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையை நாடுகின்றனர்.

இந்த ஏற்நிலையில், மருத்துவமனையிலிருந்து அகற்றப்படும் கழிவுப் பொருட்கள் கடந்த ஒரு மாத காலமாக, தேசிய கை,கால் வலிப்பு நோய் கட்டிடத்திற்கு பின்புறமாக தேங்கிக் கிடப்பதை அவதானிக்க முடிகிறது.

இது குறித்து எமது செய்திச் சேவையிடம் கருத்து வெளியிட்ட மருத்துவமனை பணியாட்தொகுதியின் பணியாளர் ஒருவர், எதிர்காலத்தில் மழையுடனான வானிலை ஏற்பட்டால், பாரிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.

வழிமூலம்: சூரியன் எவ்.எம்.செய்தி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435