DO நியமனத்தில் அநீதி: 14 பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தொழிலற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தினால் கட்டம் கட்டமாக வழங்கப்படும் தொழில்வாய்ப்பு திட்டத்திற்கு அமைய, கடந்த 20ஆம் திகதி அலரிமாளிகையில் தெரிவுசெய்யப்பட்ட 4,100 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

குறித்த சந்தர்ப்பத்தில் நியமனங்களைப் பெற்றுக்கொள்ள வந்த மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் சிலருக்கு ஏற்பட்ட அசாதாரண நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் தொழிலுக்காக அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதாக அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபோதும், குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வி;ல் இருந்த பெயர்ப்பட்டியலில் அவர்களின்; பெயர்கள் நீக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அநீதிக்கு உள்ளான 14 பட்டதாரிகள், தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் பட்டதாரிகளுக்கான தேசிய மத்திய நிலையத்தின் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

IMG_20180831_101423

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435