களுத்துறை – ஹொரனை வஹவத்த பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் அமோனியா நச்சுவாயு கசிந்ததில் 5 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஹொரனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அமோனியா நச்சுவாயு கசிந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.