வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருதங்கேணி கிழக்கு பிரதேச செயலாளரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுமார் 8 வாடிகளை உடனடியாக அகற்றுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அரச காணியில் அத்துமீறி வெளிமாவட்ட மீனவர்கள் வாடி அமைத்துள்ளதாகத் தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மன்னார், புத்தளம் உள்ளிட்ட வெளிமாவட்ட மீனவர்களால் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு என்பன பிடிக்கப்படுகின்றன.
இந்த மீனவர்களுக்கு யாழ்ப்பாணம் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதி கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வழிமூலம்: நியூஸ்பெஸ்ட்